சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 4 நவம்பர் 2023 (07:38 IST)

அல்போன்ஸ் இயக்கத்தில் சாண்டி நடித்த கிஃப்ட் படம் ட்ராப்பா?

நேரம், பிரேமம் மற்றும் கோல்ட்  ஆகிய படங்களுக்கு அடுத்து அல்போன்ஸ் புத்ரன் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு கிஃப்ட் என பெயர் வைக்கப்பட்டது. படத்தில் இளையராஜா இசையில் 7 பாடல்கள் இடம்பெறும் என போஸ்டரிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. ஆனால் இப்போது இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.

சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் அல்போன்ஸ்  வெளியிட்ட பதிவில் “எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதால் திரையரங்குகளுக்கான படங்கள் இயக்குவதை நிறுத்திக் கொள்ள போகிறேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பாடல் வீடியோக்கள், குறும்படங்கள், ஏதேனும் வெப் தொடர்கள் இயக்க முயற்சி செய்வேன்” என்று தெரிவித்து இருந்தார். அதன் காரணமாகதான் இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.