வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (08:06 IST)

மண்மனம் மாறாத பிரபுதேவா: பத்மஸ்ரீ விருதை வாங்கும் போது அணிந்திருந்த உடை என்ன தெரியுமா?

பத்மஸ்ரீ விருதை வாங்க பிரபுதேவா வேஷ்டி சட்டையுடன் சென்றது பலரது பாராட்டுக்களை பெற்றுள்ள்ளது.
 
இவ்வாண்டு மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதாக குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அப்பொழுது தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் விருது வழங்கினார்.
 
மொத்தம் 58 பேருக்கு பத்ம பூஷன், பதமஸ்ரீ, விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மலையாள நடிகர் மோகன்லால், பிரபுதேவா, டிரம்ஸ் சிவமணி ஆகியோர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நடிகர் பிரபுதேவா வேட்டி சட்டை அணிந்து வந்து விருதினை பெற்றுக்கொண்டார். இந்த போட்டோ இணையத்தில் வெளியாகி, மண்மனம் மாறாத பிரபுதேவா, சார் நீங்கள் எங்கள் பெருமை  தமிழ் நாட்டின் சொத்து  வாழ்க உங்கள் பயணம் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.