1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 10 மார்ச் 2018 (15:28 IST)

சந்தானத்துக்கு கைகொடுக்கும் பிரபுதேவா..

சந்தானம் நடிக்கும் படத்தை, ஐசரி கணேஷுடன் சேர்ந்து பிரபுதேவா தயாரிக்க இருக்கிறார்.

 
எந்த நேரத்தில் ஹீரோ ஆனாரோ தெரியவில்லை, சந்தானத்துக்கு எல்லாமே சறுக்கலாக இருக்கிறது. ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸுக்குத் தயாராகி பல மாதங்கள் ஆகியும் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது. ‘மன்னவன் வந்தானடி’ மற்றும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ இரண்டு படங்களும் பாதியிலேயே நிற்கின்றன.
 
சந்தானம் தற்போது ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை, தேனாண்டாஸ் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அந்த நிறுவனம் பண நெருக்கடியில் இருப்பதால் கைவிடப்படலாம் என்ற சூழ்நிலைக்கு வந்தது. ஆனால், ஐசரி கணேஷுடன் சேர்ந்து பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பதாக பிரபுதேவா கூறியுள்ளாராம். இதனால், மகிழ்ச்சியில் இருக்கிறார் சந்தானம்.