1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2018 (21:49 IST)

மும்பை வில்லன்களுடன் மோதும் பிரபுதேவா

தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்றான அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தை தொடர்ந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு சார்லி சாப்ளின் -2



பிரபுதேவா  நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதாஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத், நட்புக்காக வைபவ்.
கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஷக்தி  சிதம்பரம்.   

இப்படம் குறித்து இயக்குனர் ஷக்திசிதம்பரம் கூறியபோது,

முழுக்க முழுக்க கமர்ஷியல் காமெடி படமாக சார்லி சாப்ளின் உருவாகி வருகிறது. இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் பிரபுதேவா, மகதீரா வில்லன் தேவ்கில் இருவரும் மோதும் பயங்கர சண்டைக் காட்சி படமாக்கப் பட்டது. அத்துடன் பிரபுதேவா – சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சண்டைக் காட்சி ஒன்றும் அங்கேயே பிரமாண்டமாக படமாக்கப் பட்டது என்றார்.