ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (10:01 IST)

ஒருவழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபுதேவாவின் பகீரா படக்குழு!

திரிஷா இல்லனா நயன்தாரா என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அவர் அடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கி தோல்வியை தழுவினார். 

அதன் பின்னர் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘பஹிரா’ படத்தை இயக்கி முடித்தார். பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது. இந்த படத்தை பரதன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.

ஆனால் அந்த படம் சில ஆண்டுகள் ஆகியும் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் மார்ச் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளது. இந்த படத்துக்காக நடிகர் பிரபுதேவா மொட்டை அடித்து முதல் முறையாக நடித்துள்ளார்.