1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (08:59 IST)

விஜய் மொதல்ல அப்பா அம்மாகிட்ட பேசட்டும்… நடிகர் நெப்போலியன் அதிரடி கருத்து!

விஜய் தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். குறிப்பாக சினிமா துறையில் உள்ளவர்கள் அவரது வளர்ச்சியை பார்த்து ஆச்சரியப்படாதவர்களே இல்லை எனலாம். 

சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல நடிகர் நெப்போலியன் தான் விஜய் படத்தை பார்ப்பது இல்லை என்றும் அவருடன் நடித்த ஒரு படத்தின் (போக்கிரி) போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவருடன் பேசுவதும் இல்லை என்றும், தமிழ் சினிமாவில் அவருடைய வளர்ச்சி குறித்து தனக்கு தெரியாது என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதையடுத்து இப்போது ரசிகர்கள் கேள்விக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் “இப்போது விஜய்யுடன் பேச தயாராக உள்ளீர்களா?” எனக் கேட்க, அதற்கு நெப்போலியன் “ விஜய், முதலில் அவங்க அப்பா அம்மாகிட்ட பேசட்டும். இந்த செய்தி அமெரிக்கா வரை வருகிறது. நான் அவருடன் பேச தயாராக இருக்கிறேன். ஆனால் இத்தனை ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவர் என்னுடன் பேச தயாரா இருப்பார் என நான் நினைக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.