ஐஸ்வர்யா ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபுதேவா!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிக்கு நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது பயணி என்ற இசை ஆல்பத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த ஆல்பத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடதக்கது.
இந்த ஆசை இசை ஆல்பம் குறித்து கேள்விப்பட்ட இயக்குனர் பிரபுதேவா ஐஸ்வர்யா ஒரு பாடலை தேர்வு செய்தால் கண்டிப்பாக நன்றாகத்தான் இருக்கும் என்றும் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கூறினார்
மேலும் இந்த ஆல்பத்தில் பணியாற்றியவர்களை எனக்கு நன்றாக தெரியும் என்றும் அவர்கள் இந்தியாவிலேயே மிகவும் பிரபலமானவர்கள் என்றும் கண்டிப்பாக இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் ஐஸ்வர்யாவுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் பிரபுதேவா தெரிவித்துள்ளார்.