வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (23:05 IST)

''கேம் சேஞ்சர்'' படக்குழுவை பெண்டு கழட்டிய பிரபுதேவா!

game changer
ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண்  நடிப்பில் உருவாகி வரும் படம் கேம்சேஞ்சர். இப்படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார்.
 
பல கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
 
இப்படத்தின் முதல் சிங்கில் #Jaragandi இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. 
 
இந்த நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிலான ஜரகண்டி பாடல் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகிறது. அதன்படி,  பிரமாண்ட செட்டில் அமைந்துள்ள இப்பாடலுக்கு, தமன் அற்புதமான இசையமைத்துள்ளார்.இந்த செட் யுரோப் நாடுகள் மற்றும் பிரேசில் நாடுகளில் உள்ள இடங்கள் மாதிரி தில் ராஜூவுக்கு சொந்தமா இடத்தில் செட் போடப்பட்டு, மீதமுள்ள பகுதிகளுக்கு கலர்புல்லாக சி.ஜி செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த பிரமாண்ட பாடல் காட்சிக்கு இத்தனை கலைஞர்களைக் கொண்டு பிரபுதேவா 8 நாட்களில் நடனம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது.
 
இதற்குக் காரணம் முன்னமே இப்பாடலுக்கு ரிகர்ஷல் பார்த்ததால் தான் குறுகிய காலத்தில் இந்த பிரமாண்ட பாடல் காட்சிகள் அதுவும் ஷங்கர் பட பாடலுக்கான காட்சி நிறைவடைந்து சிறப்பாக வந்து, இன்று ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள்ளது.