1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (14:21 IST)

பிரபுதேவா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இசை ஆல்பம்... இத்தனை கோடி பட்ஜெட்டா?

பிரபுதேவா நடிப்பில் விரைவில் ஒரு இசை ஆல்பம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் தனியிசை ஆல்பத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சில நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் ஆல்பங்களில் பங்காற்றியுள்ளனர். அந்த வகையில் இப்போது நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில் ஒரு ஆல்பம் உருவாக உள்ளது.

இந்த ஆல்பம் பிரம்மாண்டமாக ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம். இந்த பாடலை இயக்கி, பிரபுதேவாவே நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு பாடலுக்கு இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்படுவது ஆச்சர்யமாக பலராலும் பார்க்கப்படுகிறது.