தேவி 2 ஆம் பாகத்துக்காக மொரிசியஸ் செல்லும் பிரபுதேவா
பிரபுதேவா தமன்னா, சோனு சூட், ஆர் ஜே பாலாஜி, நாசர்,ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி இருந்த தேவி படம் பலதரப்பினரிடமிருந்தும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகை தமன்னா பலராலும் பாராட்டு பெற்றார்.
மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருவதாக செய்திகள் வெளியான நிலையில் அதை உறுதி படுத்தும் விதமாக பிரபுதேவா தன் டிவிட்டர் பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் ”தேவி - 2 படத்துக்காக மொரீசியஸ் செல்லும் வழியில் எடுத்ததாகக் கூறி அவர் கோவை சரளாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளார்.”