1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (20:55 IST)

பிரபுதேவா பட இசையமைப்பாளர் கைது! புழல் சிறையில் அடைப்பு

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான அம்ரீஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

80 களின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயசித்ரா. இவரது மகன் அம்ரீஸ்(33). இவர் தமிழ் சினிமாவில் நானே என்னுள் இல்லை என்ற படத்தில் நடித்துள்ளார்.

மொட்ட சிவா கெட்டா சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்லின் படத்தில் புகழ்பெற்ற செவத்த மச்சான் என்ற பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், அம்ரீஸ் அரிய வகை இரிடியம் விற்பனை செய்வதாகக்கூறி ரு.26 கோடி மோசடி செய்த வழக்கில்  போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். தற்போது அம்ரீஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.