வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 10 ஜூன் 2023 (15:28 IST)

50 வயதில் மீண்டும் அப்பாவானார் பிரபுதேவா - வம்சத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை!

பிரபல நடிகரும்  நடன இயக்குநருமான பிரபு தேவா ரமலத் என்ற பெண்ணை 1995⁠ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் நயன்தாராவுடன் நெருக்கமாக பழகி காதலித்து அவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததால் முதல் மனைவிக்கு மனக்கசப்பு ஏற்பட்டு ⁠2011ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 
 
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடிக்க நயன்தாரா மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். அதன் பின்னர் இது சரிவராது என நயன்தாரா- பிரபு தேவா ஜோடி பிரிந்தனர். பின்னர் கொரோனா காலகட்டத்தில் மும்பையில் ஹிமானி சிங் என்ற பிசியோதெரபிஸ்ட் உடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.
பிரபுதேவா/Prabhu Deva
 
பின்னர் அவரை ரகசிய முறையில் திருணம் செய்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பிரபுதேவா - ஹிமானி சிங் ஜோடி திருப்பதி கோயில் தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாம். பிரபுதேவா குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் மொத்த குடும்பம் மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.