வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 19 மே 2018 (19:22 IST)

தினமும் வீடியோ கால்: நெருக்கத்திற்கு குறைவில்லை... பிரபாஸ் - அனுஷ்கா!

பாகுபலி படத்தில் நடித்த பிறகு பிரபாஸ் அனுஷ்கா பற்றி பல காதல் மற்றும் திருமண வதந்திகள் வெளியாகின. இவை இன்று வரை குறைந்ததாக இல்லை. தற்போது இவர்களை பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. 
 
பிரபாஸ் - அனுஷ்காவை பற்றி வசந்திகள் பல வந்தாலும், இருவரும் அதனை மறுத்து வருகின்றனர். மேலும், இந்த வதந்திகளால் அவர்களது நட்பில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்துகொள்கின்றனர். 
 
தற்போது பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்து வருகிறது. இந்த அப்டத்தில் நாயகியாக முதலில் அனுஷ்கா நடிப்பதாக கூறி பின்னர் வேறு ஒரு பாலிவுட் நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் அனுஷ்கா, பிரபாஸை சந்திப்பதற்காக துபாய் சென்றார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. இது குறித்து பிரபாஸ் - அனுஷ்கா ஆகிய இருவருக்கு நெருக்கமான தரப்பிடம் இருந்து செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
 
பிரபாஸ் - அனுஷ்கா இருவரும் எப்போதும்போல் நெருக்கமாகதான் பழகி வருகிறார்கள். தினமும் வீடியோ காலில் பேசிக்கொண்டுதான் உள்ளனர். அவர்களது நெருக்கத்திற்கு எந்த குறையும் இல்லை என தகவல் தெரிவிக்கிறது.