1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (14:32 IST)

ராதே ஷியாம் : காதலர் தினத்தன்று க்யூட் அப்டேட்!!

வரும் பிப் 14 ஆம் தேதி  காதலர் தினத்தன்று ராதே ஷியாம் படத்திலிருந்து, ஒரு முன்னோட்ட காட்சி வெளியிடப்படும் என அறிவிப்பு. 

 
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து உலக புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’ராதே ஷ்யாம்’. 
 
இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், வரும் பிப் 14 ஆம் தேதி  காதலர் தினத்தன்று காலை 9.18 மணிக்கு ராதே ஷியாம் படத்திலிருந்து, ஒரு முன்னோட்ட காட்சி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.