திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2017 (23:35 IST)

பிகினி உடைக்கு மாறும் மகிழ்மதி இளவரசி அனுஷ்கா

பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகி ரூ.1600 கோடி வசூலித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த படம் வட இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளது. நேரடி இந்தி படங்கள் கூட செய்யாத இந்த சாதனையை அறிந்து பாலிவுட்டினர் வாயை பிளந்து வருகின்றனர்.


 


இந்த படத்தின் வெற்றியால் பாலிவுட் ஊடகங்கள் பிரபாஸ்-அனுஷ்காவின் கெமிஸ்ட்ரி குறித்து அதிகம் எழுதி வருகின்றனர். இந்த நிலையில் பிரபாஸ்,அனுஷ்கா நடித்த 'பில்லா' தெலுங்கு படத்தை இந்தியில் டப் செய்து ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், அஜித் நடித்த இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான பில்லா கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியது

பாகுபலி 2 படத்தில் இளவரசியாக கம்பீரமாக பார்த்த பாலிவுட் ரசிகர்கள் அடுத்து அவருடைய பிகினி உடை அழகையும் பார்க்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.