செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (18:59 IST)

மீண்டும் தள்ளிப்போகும் ’பொன்னியின் செல்வன்’ ரிலீஸ்

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இதில், கார்த்தி, ஜெயம்ரவி,விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட தென்னிந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

ரூ.800 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின்   முதல்பாகத்துக்கான ஷூட்டிங் 70 சதவீதம் முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரையில் இப்படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் 2 ஆம் கட்ட கொரோனா பரவிவரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. பொன்னியின் செல்வன் படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.