செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:41 IST)

தனுஷைக் காக்க வைத்த இயக்குனர்… கடுப்பாகி எடுத்த முடிவு!

தனுஷ் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் சத்யஜோதி நிறுவனத்துக்காக நடிக்க இருந்தார்.

முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குனர் ராம்குமார் இயக்க தனுஷ் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படம் பற்றிய அறிவிப்பு ஓராண்டுக்கு முன்னரே வெளியானது. ஆனால் இன்னமும் அந்த படம் தொடங்கப்படவில்லை. அதற்கான காரணம் இயக்குனர் ராம்குமார்தானாம். அந்த படம் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்பதால் திரைக்கதைக்காக ஒரு ஆண்டுக்கும் மேலாக எடுத்துக் கொண்டாராம் ராம்குமார்.

ஆனால் இப்போது வரை திரைக்கதையை ராம்குமார் முடிக்காததால் தனுஷ் பொறுமை இழந்து ஒரு கட்டத்தில் அவருக்குக் கொடுத்த தேதிகளை எல்லாம் அப்படியே பாலாஜி மோகனுக்கு ஒதுக்கிவிட்டாராம். அந்த படத்தை சத்யஜோதி நிறுவனம்தான் தயாரிக்கிறது.