செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2024 (11:19 IST)

திரும்பும் பக்கமெல்லாம் பாசிட்டிவ் ரிவ்யூ.. தேசிய விருது உறுதி!? - விடுதலை-2 க்கு கிடைக்கும் மாஸ் வரவேற்பு!

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளியாகியுள்ள ‘விடுதலை-2’ படத்திற்கு காலை முதலே பரவலான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துக் கொண்டிருக்கிறது.

 

 

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை படம் எடுத்தாலும், மிக தீவிரமான படைப்பை வழங்குபவராக வெற்றிமாறன் இருக்கிறார். காமெடி நடிகர் சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இவர் தொடங்கிய நிலையில் அது இரண்டு பாகங்களாக நீண்டது. முதல் பாகத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் (சூரி) வாழ்க்கையும், அது பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) வாழ்க்கையுடன் எப்படி குறுக்கிடுகிறது என்பதும் காட்டப்பட்டிருந்தது.

 

இந்த இரண்டாம் பாகம் முழுக்க பெருமாள் வாத்தியாரின் கதையை சொல்லும் படமாக அமைந்துள்ளது. பொதுவாக தனது படங்களில் சமுதாயத்தில் உள்ள அத்துமீறல்கள், அடக்குமுறைகளை காட்டமாக விமர்சிப்பவர் வெற்றிமாறன். இந்த படத்தில் முந்தைய படங்களை விட மிக ஆழமாக இந்த கருத்துகளை அவர் பேசியுள்ளதாக படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

 

மேலும் படத்தில் கென் கருணாஸ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பும், பரபரப்பான ஆழமான திரைக்கதையும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளன. படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும்போது, இந்த படத்திற்காக கண்டிப்பாக வெற்றிமாறனுக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 

Edit by Prasanth.K