1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 2 மே 2018 (08:36 IST)

சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தமிழ் நடிகை

திரையுலகில் நடிகர்களே  சிக்ஸ் பேக் வைத்து பார்த்திருப்போம். ஆனால் தற்பொழுது நடிகை ஒருவர் தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் திறையுலகில் சரத்குமார், விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, ஆதி, அதர்வா, விஜய் போன்ற நடிகர்கள் தான் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் பிரபல தமிழ் நடிகை ஒருவர் தனது சிக்ஸ் பேக் படத்தை வெளியிட்டுள்ளார்.
 
தமிழ்த் திறையுலகில் இறுதிச் சுற்று படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ரித்திகா சிங். தனது முதல் படத்திலே தனது அசாதாரண நடிப்பின் மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இவர். அடுத்ததாக விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்திருந்தார்.
மல்யுத்த வீராங்கனையான ரித்திகா சிங், உடற்பயிற்சி செய்யும்போது எடுத்த  புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தனது சிக்ஸ் பேக் திரும்பிவிட்டதாக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ரித்திகா.