திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (14:00 IST)

என்னை கசக்கி தூக்கி போட்டுட்டாரு விஷ்ணு: பூர்ணிமா கிளப்பிய பகீர் குற்றச்சாட்டு..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா சக போட்டியாளர் விஷ்ணுவை ’என்னை யூஸ் பண்ணி கசக்கி தூக்கி போட்டு விட்டார் என குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 93 நாட்களை முடிவடைந்துள்ள நிலையில்  இன்னும் ஒரு சில நாட்களில் இறுதி கட்டத்தை அடைய உள்ளது. இந்த நிலையில் இன்று ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு போட்டியாளரை தேர்வு செய்து அவரது பிக் பாஸ் பயணம் குறித்து பேச வேண்டும் என்று டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. 
 
இதில் பூர்ணிமா பேசிய போது  விஷ்ணு ஒரு விஷயத்தை அடைவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். அவர் கண்கலங்கி இருந்ததை கூட நான் பார்த்திருக்கிறேன். அவரால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு கசக்கி தூக்கி போடப்பட்டது நான் தான்’ என்று கூறினார். அப்போது விஷ்ணு பதிலடியாக நீதான் எல்லோரையும் யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்டா என்று கூறுகிறார் 
 
இந்த டாஸ்க்கில் தினேஷ் குறித்து விசித்ராவும், அர்ச்சனா குறித்து மாயாவும், மாயா குறித்து மணியும் பேசுகின்றனர்.
 
 
Edited by Siva