1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (10:45 IST)

பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க்.. பெட்டியை எடுக்கும் போட்டியாளர் யார்?

money
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் இறுதி நேரத்தில் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்படும் என்றும் ஒரு போட்டியாளர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு தானாகவே வெளியேறிவிடலாம் என்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்பதும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும். 
 
அந்த வகையில் ஏழாவது சீசனின் பணப்பெட்டி டாஸ்க் இன்று தொடங்கியுள்ளது. முதலில் ஒரு லட்சம் என தொடங்கி அதன் பின்னர் 5 லட்சம் வரை பணப்பெட்டியின் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பணப்பெட்டியை யார் எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  
 
குறிப்பாக விசித்ரா, தினேஷ்,  விஷ்ணு, மணி ஆகியவர்களின் ஒருவர் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது பணப்பெட்டியின் மதிப்பு 10 லட்சம் வந்தால் யோசிக்கலாம் என தினேஷ் கூறிய நிலையை யாராவது ஒருவர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என விசித்ரா கூறும் காட்சியும் இன்றைய முதல் புரமோ வீடியோவில் உள்ளது
 
Edited by Siva