1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 டிசம்பர் 2023 (13:36 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன்! சிக்கியவர்கள் யார் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் நடந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பை பிக் பாஸ் வெளியிட்டுள்ளார். 
 
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் நடைபெறும் என்ற நிலையில் இந்த வாரம் ஓப்பன் நாமினேசன் நடந்தது. அதில் மாயா, தினேஷ், மணி, ரவீனா மற்றும்  விஷ்ணு ஆகிய ஐந்து பேர் நாமினேசன் செய்யப்பட்டுள்ளனர். 
 
ஓப்பன் நாமினேஷன் நடைபெறும்போதே அதற்கான காரணத்தை கூறிய போது  போட்டியாளர்கள் மத்தியில் பிரச்சனை வந்தது என்பதும் இதனால் கடந்த வாரம் அமைதியாக இருந்த பிக் பாஸ் வீடு மீண்டும் சண்டை சச்சரவு ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் இந்த வாரம் நிக்ஸன், பூர்ணிமா ஆகியோர் நாமினேஷனில் இருந்து தப்பித்துள்ளது குறித்து பார்வையாளர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விக்ரம் சரவணன் வெளியேறும் போது மாயா அநாகரிகமாக நடந்து கொண்டதை அடுத்து அவரை வெளியேற்ற வேண்டும் என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran