1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (14:43 IST)

பீஸ்ட் படக்குழுவினரைப் பிரிந்த பூஜா ஹெக்டே!

பூஜா ஹெக்டே தமிழில் ரி எண்ட்ரி கொடுக்கும் படமாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முகமூடி படத்துக்கு பின் மீண்டும் தமிழில் பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடிக்கிறார். இன்னும் 30 நாட்கள் படத்தின் படப்பிடிப்பு மீதமிருக்கும் நிலையில் பூஜா ஹெக்டே சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பூஜா படக்குழுவினருக்கு குட்பை சொல்லி பிரிந்துள்ளார்.