புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (10:57 IST)

பொன்னியின் செல்வன வெங்கட் பிரபு எடுத்திருந்தா..? – நெட்டிசன் கலாய்க்கு வெங்கட் பிரபு ட்வீட்!

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் பொன்னியின் செல்வனை வெங்கட் பிரபுவுடன் இணைத்து இடப்பட்ட கலாய் பதிவில் வெங்கட் பிரபு பதிவிட்டது வைரலாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். கல்கியின் வரலாற்று நாவலான இதை படமாக எடுப்பது மணிரத்னத்தின் கனவு திட்டமாகும். இதற்கான படப்பிடிப்புகள் தொடங்கிவிட்ட நிலையில் சமீபத்தில் இதில் யார் யார் என்னென்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற அப்டேட் வெளியானது.

இந்நிலையில் கதாப்பாத்திர தேர்வு குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அதிருப்தியும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்ட நபர் ஒருவர் “பொன்னியின் செல்வன வெங்கட்பிரபு எடுத்தா பிரேம்ஜி கேரக்டர நெனச்சி பாரு.. என் செலக்சனே பரவால்ல தோணும்..” என மணிரத்னம் சொல்வது போல காமெடி மீமை பகிர்ந்தார்.

அதற்கு கேஷுவலாக பதில் ட்வீட் போட்ட இயக்குனர் வெங்கட்பிரபு “ஹா.. ஹா.. ஹா.. அடப்பாவிகளா” என பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபி இயக்கும் படங்களில் எல்லாம் அவரது தம்பி பிரேம்ஜி ஒரு கதாப்பாத்திரத்தில் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.