வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (23:34 IST)

திரைப்பட விழாவில் சூர்யாவின் சூப்பர்ஹிட் படம் !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் வெளிநாட்டில் திரையிடப்படவுள்ளது.

நடிகர் சூர்யா தயாரித்த நடித்த படம் சூரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்
.
இப்படம் அமெசான் பிரைமில் கடந்தாண்டு வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆஸ்கார் விருது விழாவிற்குச் சென்ற பெருமை கொண்ட இப்படம் தற்போது ஆஸ்திரேலியா தலைநகர் மெல்போர்னில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படம் திரையிடப்படவுள்ளது.

இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.