பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகத்துக்கு விக்ரம் கதை எழுதுவார்… மணிரத்னம் செம்ம கலாய்!
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்நிலையில் படம் ரிலீஸாக இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில் இப்போது ப்ரமோஷன்கள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னத்திடம் “பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் வருமா?” எனக் கேட்ட போது “மூன்றாம் பாகத்துக்கான கதையை வேண்டுமானால் விக்ரம் எழுதுவார்” எனக் கூறி ஜாலியாகக் கலாய்த்துள்ளார்.