திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2023 (08:39 IST)

தென்னிந்தியாவிலேயே முதல் படம் … புதிய தொழில்நுட்பத்தில் ரிலீஸ் ஆகும் பொன்னியின் செல்வன் 2!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இப்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம், 3.30 மணிநேரம் அளவுக்கு பைனல் மிக்ஸுக்கு அனுப்பப் பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.  படம் 2மணிநேரம் 37 நிமிடம் 33 விநாடி ஓடும் என சொல்லப்படுகிறது. முதல் பாதி ஒரு மணிநேரம் 19 நிமிடமும், இரண்டாம் பாதி ஒரு மணிநேரம் 18 நிமிடமும் ஓடும் என சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் மூன்றாம் பாகம் சம்மந்தமான பேச்சுவார்த்தைகளும் இப்போது நடப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படம் 4DX என்ற அதிநவீன தொழில்நுட்பத்தோடு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொழில்நுட்பத்தில் ரிலீஸ் ஆகும் முதல் தென்னிந்திய படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் இதன் மூலம் பெருகிறது.