1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (19:23 IST)

பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாள் இடம், தேதி அறிவிப்பு!

Ponniyin Selvan
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த தேதி மற்றும் இடம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவுக்கு பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.