புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (08:40 IST)

‘பொன்னியின் செல்வன்’ அமெரிக்க ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து லைகா மற்றும் மற்றொரு தயாரிப்பாளரான மணிரத்னம் ஆகியோர் இப்போது படத்தின் பிஸ்னஸை தொடங்கி விட்டனர். தெலுங்கில் தில் ராஜு படத்தை வெளியிட, மலையாளத்துல் கோபுரம் கோபாலன் வெளியிடுகிறார். அதையடுத்து தற்போது அமெரிக்காவில் பிரபல நிறுவனமான சரிகம பிலிம்ஸ் இந்த படத்தை வெளியிட உள்ளது. இதை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.