1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2023 (15:51 IST)

பொன்னியின் செல்வன் முதல் பாகம் மீண்டும் ரி ரிலீஸ்.. பார்த்திபன் பகிர்ந்த தகவல்!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இப்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம், 3.30 மணிநேரம் அளவுக்கு பைனல் மிக்ஸுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும், திரையரங்குகளில் ரன்னிங் டைம் 3 மணிநேரம் அளவுக்கு இருக்கும் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரம் முன்பாக, சில திரைகளில் மட்டும் முதல் பாகத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.