1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (08:02 IST)

இன்னும் என்னை அப்படிதான் பார்க்கிறார்கள்… பொன்னியின் செல்வன் விழாவில் ஷோபனா!

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று முன் தினம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் மணிரத்னம் படத்தில் நடித்த கதாநாயகிகள் ரேவதி, ஷோபனா மற்றும் குஷ்பு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய ஷோபனா “இன்னும் என்னை மக்கள் தளபதி படத்தில் நடித்த நடிகையாகதான் பார்க்கிறார்கள். அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் மணிரத்னத்துக்கு எனது நன்றி” எனக் கூறியுள்ளார்.