செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (20:47 IST)

திட்டமிட்டபடி ரிலீஸாகுமா பொங்கல் படங்கள்?

திட்டமிட்டபடி பொங்கல் படங்கள் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த மாதம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, இதுவரை 7 படங்கள் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’, சுந்தர்.சி.யின் ‘கலகலப்பு 2’,  அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, விமலின் ‘மன்னர் வகையறா’, சண்முக பாண்டியனின் ‘மதுர வீரன்’ ஆகிய  படங்கள்தான் அவை.
 
மேற்கண்ட படங்களில், இதுவரை ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துக்கு மட்டுமே சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. எனவே, குழந்தைகள் இந்தப் படத்தைத் தனியாகப் பார்க்க முடியாது. பெற்றோர்கள்  துணையுடன் மட்டுமே பார்க்க முடியும்.
 
இதைத்தவிர, மற்ற படங்கள் இன்னும் சென்சார் ஆகவில்லை. சில படங்கள் சென்சாருக்கே அனுப்பப்படவில்லை என்றும் சொல்கிறார்கள். ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்கள் கூட இல்லாத நிலையில், பொங்கல் படங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி  ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.