ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2017 (12:17 IST)

ஒரே நாளில் 7 படங்கள் ரிலீஸ்; ஏன் தெரியுமா?

நாளை வெள்ளி கிழமை என்பதால் படங்கள் ரிலீஸ் ஆவதில் வரிசை கட்டிக்கொண்டு நிற்கிறது. ஒரே நாளில் 7 திரைப்படங்கள் ரிலீஸாக இருப்பதால் தியேட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் திரைக்கு வந்த தீரன் அதிகாரம் ஒன்று, திருட்டுப் பயலே 2, அண்ணாதுரை, ரிச்சி, சத்யா படங்கள் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சிறிய படங்களை ரிலீஸ் செய்வதில் கடுமையான நெருக்கடி இருப்பதாக  திரையுலகினர் கூறி வருகிறார்கள்.
 
இன்று ‘மாயவன்’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. நாளை ஒரே நாளில் மட்டும் அருவி, பிரம்மா டாட்காம்,  சென்னை-2 சிங்கப்பூர், கிடா விருந்து, பள்ளிப்பருவத்திலே, வீரா, ஆங்கில படமான கிரிமினல் ஆகிய 8 படங்கள் திரைக்கு வரும்  என்று அறிவிக்கப்பட்டன. அதில் ‘வீரா’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற 7 படங்கள் திரைக்கு வரும்  என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இரண்டே நாட்களில் 7 படங்கள் திரைக்கு வருவதால் எத்தனை படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் என்பது கேள்விக்  குறியாக உள்ளது. 22-ந் தேதி பெரிய படங்கள் வர உள்ளன. அதற்கு முன்பு தியேட்டர்களில் இடம் பிடிப்பதற்காகவும், இந்த ஆண்டுக்கான சிறிய படங்களுக்குரிய அரசு மானியம் பெறுவதற்காகவும், பல சிறிய பட்ஜெட் படங்களை இந்த மாதமே திரைக்கு  கொண்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.