புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2017 (14:42 IST)

ஜிஎஸ்டி-யால் ஒரே நாளில் குதித்த 7 படங்கள்

ஜிஎஸ்டி வரியாக இன்று ஒரே நாளில் 7 புதிய படங்கள் வெளியாகியுள்ளது.


 

 
நாளை முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பால் டிக்கெட் கட்டணங்கள் உயர்வு, வரிவிலக்கு ரத்து ஆகியவை அமலுக்கு வருகிறது. இதனால் இன்று ஒரே நாளில் 7 புதிய படங்கள் வெளியாகியுள்ளது.
 
இவன் தந்திரன், யானும் தீயவன், அதாகப்பட்டது மகாஜனங்களே, எவனவன், காதல் காலம், எங்கேயும் நான் இருப்பேன், இவன் யாரென்று தெரிகிறதா?, ட்ரான்ஸ் ஃபார்மர்ஸ் - ஹாலிவுட் படம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும், ரூ.100க்கும் அதிகமான விலை கொண்ட தியேட்டர்களில், ஜிஎஸ்டி வரி விதிப்பின்படி டிக்கெட்டிற்கு என்ன விலை நிர்ணயிப்பது என்பதில் தியேட்டர் அதிபர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே, ஆன்லைன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.