1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (07:24 IST)

நேரடியாக டெலிவிஷன் மற்றும் ஓடிடியில் வெளியாகும் பொன் ஒன்று கண்டேன்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

’கண்டநாள் முதல்’, ’கண்ணாமூச்சி ஏனடா’ போன்றப் படங்களை இயக்கிய இயக்குநர் பிரியா இயக்கத்தில் நடிகர்கள் அசோக்செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'பொன் ஒன்று கண்டேன்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க அவரது ஒய்.எஸ்.ஆர் ஃபில்ம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் நேரடியாக கலர்ஸ் தமிழ் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தில் நடித்திருந்த நடிகரான வசந்த் ரவி ‘இந்த தகவல் தங்களுக்கு முன்பே தெரிவிக்கப்படவில்லை’ என்று கூறி வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இப்போது பொன் ஒன்று கண்டேன் திரைப்படத்தின் டெலிவிஷன் ப்ரிமீயர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே நாளில் ஜியோ சினிமாஸ் ஓடிடியிலும் இலவசமாக பார்க்கும் விதமாக ஸ்ட்ரீம் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.