1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (08:48 IST)

விஷால் அளித்த புகார்: ஆர்.பி.சவுத்ரியிடம் விரைவில் விசாரணை

விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தரப்பிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படம் தயாரித்துள்ள ஆர். பி. சௌத்ரி தமிழ்த் திரைப்பட நடிகர்களான ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர்களின் தந்தை. 
 
இதனிடையே, வாங்கிய கடனை செலுத்திய பிறகும் உறுதி மொழி பத்திரங்களைத் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது தி.நகர் துணை ஆணையரிடம் விஷால் புகார் அளித்திருந்தார். 
 
எனவே, இந்த புகார் தொடர்பாக தொலைபேசி மூலமாக நடிகர் விஷாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தரப்பிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.