வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (13:24 IST)

லியோ திரைப்பட வெற்றிவிழா.. ரசிகர்கள் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும்: காவல்துறை

LEO
லியோ திரைப்பட வெற்றிவிழா நிகழ்ச்சியில் பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பாஸ் உடன் ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை அறிவித்துள்ளது.
 
லியோ வெற்றி விழா நாளை மாலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு வரும் ரசிகர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
 
 சமீபத்தில் இதே நேரு விளையாட்டு அரங்கில் நடந்த கார்த்தியின் ஜப்பான் படத்தின் விழாவின்போது காவல்துறையினர் மேற்கண்ட விதிமுறை நிபந்தனைகளை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் காவல்துறையின் இந்த நிபந்தனைகளால் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 
 
ஆனால் காவல்துறை உறுதியாக மேற்கண்ட நிபந்தனைகளை கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran