வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (19:23 IST)

50 நாட்கள் வரை ஓடி உண்மையாக வென்ற படங்கள்:-புளூ சட்டை மாறன்

தமிழ் சினிமாவில் வாரம் தோறும் பல புதிய படங்கள் ரிலீஸாகி வருகின்றன. இதில் பல சில படங்கள்  ரசிகர்களின் வரவேற்பை பெறுகின்றனர். சில படங்கள் வரவேற்பை பெறுவதில்லை.

இந்த நிலையில்,  தமிழ் சினிமாவில் தியேட்டரில் ரிலீஸாகி  உண்மையாகவே 50  நாட்கள் ஓடிய படங்கள் பற்றி சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் சில படங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதில், ''ப்ளாக் டிக்கட் விற்காமல், ஆடியோ லாஞ்சில் காக்கா கதை சொல்லாமல், பாடல்களில்  'பட்டத்தை புடுங்கறாங்க' என்று புலம்பாமல், 80% ஷேர் கேட்டு அலையாமல், நான் ரெடி போஸ்டர் அடி என அரசியல் காமடி செய்யாமல்..

நின்று நிதானமாக 50 நாட்கள் வரை ஓடி உண்மையாக வென்ற படங்கள்:

டாக்டர், மாநாடு, விக்ரம், பொன்னியின் செல்வன் 1, லவ் டுடே, மார்க் ஆண்டனி ''என்று குறிப்பிட்டுள்ளார்.