புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (10:17 IST)

நயன்தாரா - விக்னேஷ் சிவன் மீது போலீஸ் புகார்: என்ன காரணம்?

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ஆரம்பித்த நிறுவனம் ரவுடி பிக்சர்ஸ் என்பதும் இந்நிறுவனம் பல திரைப்படங்களை தயாரித்து உள்ளது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் ரவுடிகள் பெயரில் பட நிறுவனம் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது 
 
ரவுடிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ரவுடிகள் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதால், ரவுடிகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும் என்று அந்த புகாரில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.