திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 மார்ச் 2022 (09:29 IST)

கறிக்குழம்பு சமைத்து தரவில்லை: மனைவி மீது போலீஸில் புகார் அளித்த ஆசாமி!

தனது மனைவி கறி குழம்பு சமைத்து தரவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த ஆசாமியால் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் நள்ளிரவில் 5 முறை காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து அழைத்தார். ஏதோ அவசரம் என்று போனை எடுக்க காவல் துறையினரிடம் தனது மனைவி ஆட்டுக்கறி குழம்பு செய்து தரவில்லை என்று புகார் அளித்தார் 
 
இதனையடுத்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது அந்த நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த ஆசாமியை எச்சரித்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
நள்ளிரவில் ஐந்து முறை தனது மனைவி ஆட்டுக்கறி குழம்பு சமைத்து தரவில்லை என புகார் கூறிய ஆசாமியால் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது