1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (19:26 IST)

ப்ளீஸ் இப்படியெல்லாம் ட்ரஸ் போடாதீங்க - ஷாலினி பாண்டேவுக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே . இவர் தற்போது  தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஜீவாவுடன் நடித்திருந்த கொரில்லா படம் திரைக்கு வந்தது. 


 
ஒரே படத்தின் மூலம் ஓஹோ ஓஹோன்னு புகப்பெற்ற இவர் தமிழ், தெலுங்கி,  இந்தி , அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் நடிகையாக உருமாறிவிட்டார். பப்லியான முகபாவனை கொண்ட இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளையடித்துவிட்டார். 
 
ஆனால் தற்போது தனது புஷ் புஷ் உடலை குறைத்து ஒல்லியாக மாறுகிறேன்னு 
எப்போதும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி வருவதோடு மோசமான கவர்ச்சி புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தொடர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு அரை குறையான மேலாடை மற்றும் ஜீன்ஸ் மட்டும் அணிந்துகொண்டு மோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். 
 

 
இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் " தயவுசெய்து இப்படியெல்லாம் ட்ரஸ் பண்ணாதீங்க இது உங்களுக்கு கொஞ்சம் கூட செட் ஆகல" என்று கமண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.