1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (18:06 IST)

தெலுங்கில் பிசாசி ஆன பிசாசு… முதல் முறையாக மிஷ்கின் படம் அக்கட தேசத்தில்!

இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம் தெலுங்கிலும் டப் ஆக உள்ளதாம்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஆண்ட்ரியா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். அவர்களுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளதால் தெலுங்கிலும் டப் செய்து வெளியிட உள்ளனராம். இந்த படத்துக்கு பிசாசி 2 எனப் பெயர் வைத்துள்ளனராம்.