வெற்றிமாறன் இயக்கும் விடுதலை 2 ஷூட்டிங்கில் திடீர் மாற்றம்...!
இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இப்போது இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி நடைபெற்றது.
30 நாட்களில் மொத்தக் காட்சிகளையும் முடித்துவிட்டு திரும்புவதாக திட்டமிட்டு இருந்த நிலையில் இப்போது 15 நாட்களில் ஷூட்டிங்கை பாதியிலேயே நிறுத்திவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஷூட்டிங் நாட்கள் இன்னும் அதிகரிக்கும் என்றும் மொத்தமாக 50 நாட்கள் ஷூட்டிங் அடுத்த கட்டங்களில் நடைபெறும் விதம் அதை வெற்றிமாறன் மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் இல்லாத நடிகர்கள் சிலர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.