திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (19:09 IST)

அடிச்சு நவுத்தும் மழை: வட சென்னைவாசிகளே சேதி உங்களுக்குதான்...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சீரான இடைவெளியில் மழை பெய்து வருகிறது. ஒரு வாரமாக மழை இல்லாத நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது. 
 
கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தனர். 
 
இந்த அறிவிப்பிற்கு ஏற்றவாறே இன்று முதல் மழை பெய்ய துவங்கியுள்ளது. இன்று காலை சென்னையில் நல்ல பெய்தது. வெயில் இன்றி மேகம் சற்று மூட்டத்துடனே காணப்படுகிறது. 
 
இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், இந்த முறை வடசென்னைக்கு அதிக மழை பெய்யக்கூடும். அது போல் சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் மழை உண்டு என தெரிவித்துள்ளார்.