1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 20 டிசம்பர் 2018 (21:37 IST)

வெளியானது ! "பேட்ட" ஆஹா கல்யாணம் பாடல்!

அனிருத் இசையில் பேட்ட "ஆஹா கல்யாணம்" பாடல் வெளியாகியது.


 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.  வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் சிம்ரன், விஜய் சேதுபதி, சசிகுமார் என பலர் நடித்துள்ளார்கள். 
 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று காலை வெளியானது.
 
பேட்ட படத்தின் ட்ரைலர் 2019 புத்தாண்டு அன்று மாலை வரும் என்று பெரிதும் பேசப்பட்டு வருகிறது. பாடல் மற்றும் டீஸர் கொண்டாட்டத்தை தொடர்ந்து ட்ரைலருக்காக மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.
 
இந்நிலையில் சற்றுமுன் பேட்ட படத்தின் "ஆஹா கல்யாணம்" பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி அனைவரயும் ஈர்த்து வருகிறது. இப்பாடல் வரிகளை கார்த்திக் எழுதியிருக்கிறார். 
 
"ஆஹா ஆஹா கல்யாணம் ஆசை நூறு " என்ற வரிகளில் ஆரம்பிக்கும் இந்த நாட்டுப்புற பாடல்  அந்தோணி தாசன் குரலில் வேகமாக அதிவேகத்துடன் ஒலித்து செவிக்கு விருந்தளிக்கிறது. இந்த பாடலில் ரஜினியுடன் சேர்ந்து  திரிஷா டூயட் ஆடுகிறார்.