வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 3 மே 2023 (07:48 IST)

பீட்டர்பால் எனது கணவரும் இல்லை, நான் அவருடைய மனைவியும் இல்லை: நடிகை வனிதா

சமீபத்தில் பீட்டர் பால் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த நிலையில் அவருடைய மறைவை செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் காலமானார் என்று கூறியது. 
 
இந்த நிலையில் ஊடகங்களுக்கு நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் பீட்டர் பாலை நான் ஒருபோதும் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் 2020 ஆம் ஆண்டு நாங்கள் ஒன்றாக இருந்தது உண்மைதான் என்றும் ஆனால் சில நாட்களில் அந்த உறவு முடிவடைந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். 
 
எனவே நான் பீட்டர் பாலின் மனைவி அல்ல அவர் என் கணவரும் அல்ல என் கணவர் இறந்து விட்டதாக தயவு செய்து பரப்புவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என் வாழ்க்கையில் நான் முழுமையாக வாழ்கிறேன், நான் இப்போதும் சிங்கிள் தான் என வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
 
Edited by Siva