திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 6 மார்ச் 2024 (22:30 IST)

கிடப்பில் போடப்படுகிறதா விடாமுயற்சி?- அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

விடாமுயற்சி படத்தில் ஹீரோவாக அஜித்குமார் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
இப்படத்தின் ஷூடிங் அஜர்பைஜானில் நடந்த முடிந்த நிலையில், அடுத்து, ஜார்ஜியாவில்  2 வது கட்ட ஷூட்டிங்   என தகவல் வெளியானது. ஆனால்,  விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பற்றி இப்போது பேச வேண்டாம் என லைகா கூறியதாக தகவல் வெளியாகிறது.
 
ஏனென்றால், சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி ஆகிய இரு பெரிய படங்கள் ஒரே   நேரத்தில் ஷூட்டிங் நடந்து வந்ததால் லைகாவுக்கு  நிதி நெருக்கடி எழுந்துள்ளதாகவும், இப்போது இரு படங்களையும்   ஒரே  நேரத்தில் எடுக்க இயலாத சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.
 
எனவே ரஜினியின் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளதால்,  இப்படத்தின் பிஸினஸ் முடிந்தபிறகு வரும் பணத்தில் விடாமுயற்சி பட ஷுட்டிங் நடக்கும் என கூறப்படுகிறது.
 
இந்த செய்தி இன்னும் நடிகர் அஜித்திற்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
 
விடாமுயற்சி பட ஷூட்டிங் தள்ளிப்போவதால் ரசிகர்கள் எப்போது அப்டேட் வெளியாகும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.