பெரிய காக்கா முட்டையின் இதயத்தை கொள்ளையடித்த ஷிவானி!
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஹீரோயின் ரேஞ்சிற்கு பேமஸ் ஆகிவிட்டார்.
ஷிவானியின் கவர்ச்சியில் பல இளசுகள் சொக்கி விழுந்துவிட்ட நிலையில் தற்ப்போது காக்காமுட்டை படத்தில் பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ் சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஷிவானி கவர்ச்சி அழகில் மொத்தமாக மூழ்கி எல்லா கேள்விகளுக்கும் ஷிவானி ஷிவானி ஷிவானின்னு பதில் அளித்துள்ளார். அதை நீங்களே பாருங்களேன்...