ஒத்த கையால் சைக்கிளை தூக்கி அசால்ட்டா போஸ் கொடுத்த ஜூலி!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (14:56 IST)

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.

பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார்.கடந்த சில தினங்களாக வித விதமான மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தி இணையவாசிகளை வாய்பிளக்க செய்த ஜூலி தற்ப்போது சைக்கிளிங் செய்துவிட்டு ஒத்த கையால் சைக்கிளை தூக்கி நடுரோட்டில் நின்றபடி போஸ் கொடுத்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார். அத்துடன் "சைக்கிள் ஓட்டத் தொடங்குங்கள், ஏனென்றால் நம் இயற்கையின் பரிசை இழந்தவுடன் நம் வாழ்க்கையை இழப்போம்." என பதிவிட்டுள்ளார்.
ஜூலியின் இந்த போட்டோ இன்ஸ்டாவாசிகளை ஈர்த்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :