போதும்டா..! இதென்ன எழவு வீடா? கடுப்பாகிய ரசிகர்கள்!

Last Modified செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (13:39 IST)
பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று அதிரடியாக சரவணன் வெளியேற்றப்பட்டதை மற்ற ஹவுஸ்மேட்ஸ்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை எண்ணி அழுது ஒப்பாரி வைப்பதால் பார்வையாளர்கள் செம்ம கடுப்பாகி கமெண்ட்ஸ் செய்து திட்டி வருகின்றனர். 


 
தெளிவான காரணம் எதுவும் சொல்லாமல், திடீரென முடிவெடுத்து அதிரடியாக பிக்பாஸ் வீட்டை விட்டு சரவணனை நேற்று வெளியேற்றத்தால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும் வீட்டிலிருக்கும் சக போட்டியாளர்களும் சரவணனை எண்ணி அழுது புலம்பினர். குறிப்பாக கவினும் ...சாண்டியும் விம்மி விம்மி அழ அவர்களுக்கு சேரன் அட்வைஸ் கொடுக்கிறார்.
 
இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் "அடேங்கப்பா...! போதும்டா சாமி முடியல" என்று கூறி சாண்டி மற்றும் கவினை கலாய்த்து திட்டி வருகின்றனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :